இலங்கையில் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்த தயாராகும் தியாகேந்திரன் வாமதேவா!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Thiyagendran Vamadeva #Music
Thamilini
1 year ago
இலங்கையில் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்த தயாராகும் தியாகேந்திரன் வாமதேவா!

அண்மையில் ஜு தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற சரிகமபா இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த இரு சிறுமிகள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். 

இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி மகுடம் சூடினார். அதேபோல் மலையகத்தை சேர்ந்த அஷானி தன்னுடை மாபெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார். 

இந்த இசை நிகழ்ச்சி மூலம் மலையக சமூகத்தின் நிலைமையை உலகறிய செய்ததோடு, தான் பிறந்து வளர்ந்த நயபன தோட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெற்றுக்கொடுத்தார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இரு சிறுமிகளுக்கும் தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் உதவி தொகைகளையும் வழங்கியிருந்தார். அஷானிக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கையில் உள்ள இசைத் துறையில் ஆர்வமுள்ளவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தியாகி ஐயா அவர்கள் மேற்கொண்டுள்ளார். 

அதாவது இதுவரை இல்லாத அளவில் வரலாறு காணாத பரிசுகளுடன் இந்த ஆண்டு மிகப்பெரும் பாடகர் தேர்வு இலங்கையில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!