ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கஜேந்திரகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

#SriLanka #Sri Lanka President #Protest #Ranil wickremesinghe #Gajendrakumar Ponnambalam #Lanka4 #Court
Mayoorikka
1 year ago
ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கஜேந்திரகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு, எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

 இந்தநிலையில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்பதை கருதிற்கொண்டு, எட்டு பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு யாழ்ப்பாணம் காவல்துறையினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில்,  இன்றைய தினம் முன்வைக்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

 நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினது சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!