நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு : நீர்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!
தெதுரு ஓயா, ராஜாங்கனை, கலா ஓயா, லுணுகம்வெஹர, வெஹரகல மற்றும் ஏனைய நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சுமார் 92 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேவேளை நேற்றிரவு பெய்த அடை மழை காரணமாக மட்டக்களப்பு புகையிரத நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், புகையிரத போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கந்தளாய் ஏரியின் வான்கதவு திறக்கப்பட்டமையினால் கந்தளாய் அக்போபுர வீதியில் சுமார் ஒரு கிலோமீற்றர் ஆழத்தில் ஏரியின் அடியில் பயணித்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
எவ்வாறாயினும், வான் கதவுகள் மூடப்பட்டு பணியாளர்கள் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, லோகல்ல ஓயாவில் படகில் மீன்பிடிக்கச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனார். 25 வயதுடைய இளைஞன் ஒருவரைக் காணவில்லை என்றும் அவரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.