லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை சூத்திரம் வெளியானது!
#SriLanka
#Litro Gas
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
புதிய VAT திருத்தங்களின் மூலம், எரிவாயு விலை ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. எரிவாயுவிற்கு வாட் வரியை புதிதாக சேர்த்ததே இதற்குக் காரணமாகும்.
இருப்பினும் எரிவாயுவுக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் விமான சேவைகளில் 2.5% தொகை நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி எரிவாயுவின் புதிய விலையானது 15.5% அதிகரிக்கப் போகிறது. புதிய வரி சதவீதத்துடன் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் 12.5 கிலோகிராம் எடைக் கொண்ட சிலிண்டரின் விலை, 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது அதே எரிவாயு சிலிண்டர் 3565 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.