புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை களமிறக்க திட்டமிடும் அல்லிராஜா சுபாஸ்கரன்?

#SriLanka #Lanka4 #President #Tamilnews #sri lanka tamil news #Lyca #Subaskaran #Allirajah
Thamilini
1 year ago
புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன்  ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை களமிறக்க திட்டமிடும் அல்லிராஜா சுபாஸ்கரன்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளரை களமிறக்க சர்வதேச வர்த்தகர் சுபாஷ்கரன் அலிராஜா செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சர்வதேச வர்த்தகரும், லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளருமான சுபாஷ்கரன் அலிராஜா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசியல் கட்சி ஒன்றின் உரிமையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 அவர் பொறுப்பேற்றுள்ள அரசியல் கட்சி "அருணலு மக்கள் கூட்டணி" என்ற பெருந்தோட்ட அரசியல் கட்சியாகும். அதன் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். திரு.கிருஷன் என்றும் கூறப்படுகிறது. 

 புலம்பெயர் தமிழ் மக்களுடன் நெருக்கமாக செயற்பட்டு வரும் சுபாஷ்கரன்,  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கும் நோக்கில் இக்கட்சியை கையகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த மாதம் முதல் பரந்துபட்ட ஊடக நடவடிக்கையை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!