மருத்துவ சிகிச்சைக்காக கனடாவில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை

#Canada #Medical #service #சேவை #லங்கா4 #மருத்துவமனை #Canada Tamil News #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 canada tamil news
மருத்துவ சிகிச்சைக்காக கனடாவில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை

உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படும் கனடாவிலும் மக்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக நீண்ட காலம் காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 நாட்டில் சுமார் ஐந்து மில்லியன் கனடியர்கள் சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ரெஜினாவில் அமைந்துள்ள செகன்ட்ஸ்ட்ரீட் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 கனடாவில் சுமார் ஆறரை லட்சம் பேர் சத்திர சிகிச்சைகளை செய்து கொள்வதற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் விசேட நிபுணத்துவ மருத்துவர்களின் சேவையை பெற்றுக் கொள்ள காத்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

images/content-image/1703685829.jpg

 மேலும், சுமார் 1.5 மில்லியன் பேர் சில முக்கிய பரிசோதனைகளை செய்து கொள்வதற்காக காத்திருப்பதாகவும் குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியல் மூன்று மில்லியன் என்ற போதும் மெய்யாக இந்த எண்ணிக்கை ஐந்து மில்லியன் வரையில் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!