அமெரிக்காவில் இந்து கோயில் சுவற்றில் எழுதப்பட்ட இந்தியாவுக்கு எதிரான வாசகம்

#India #Hindu #Temple #America #world_news #Lanka4 #Tamilnews
Prasu
1 year ago
அமெரிக்காவில் இந்து கோயில் சுவற்றில் எழுதப்பட்ட இந்தியாவுக்கு எதிரான வாசகம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோயில் சுவற்றில் இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நெவார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

 "கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம்." "மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க நெவார்க் காவல் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம்," என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் தெரிவித்து உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!