ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் சட்டத்தின் கீழ் குழந்தைகளைப் பாதுகாக்க ஆபாச தளங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை தனது ஆன்லைன் தளங்களின் பட்டியலில் மூன்று ஆபாச வலைத்தளங்களைச் சேர்த்துள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் இருந்து, புதிய EU டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் (DSA) கீழ், குறிப்பாக குழந்தைகளைப் பாதுகாக்க தளங்கள் கடுமையான விதிகளைப் பயன்படுத்த வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



