காசா போர் நிறுத்த வாக்கெடுப்பில் ஏற்பட்ட தாமதம்!

#world_news #Israel #Hamas #Gaza
PriyaRam
1 year ago
காசா போர் நிறுத்த வாக்கெடுப்பில் ஏற்பட்ட தாமதம்!

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இடம்பெறவிருந்த வாக்கெடுப்பு தாமதமடைந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை மீது வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.

குறித்த வாக்கெடுப்பு இலங்கை நேரப்படி நேற்றிரவு நடத்தப்படவிருந்தது. எனினும் இது தொடர்பான விவாதம் நிறைவடையாமையால் குறித்த வாக்கெடுப்பு தாமதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதன்படி, காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் யோசனை மீதான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் வாக்கெடுப்பு இன்றிரவு நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!