ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு! 4000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஐஸ்லாந்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து எரிமலை வெடித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள காணொலிகள் லாவாவின் தீவிரத்தை காட்டுகின்றன.
ஐஸ்லாந்து பிரதமர் கத்ரின் ஜகோப்ஸ்டோட்டிர், "நாங்கள் சிறந்ததை எதிர்பார்க்கிறோம் ஆனால் இது கணிசமான வெடிப்பு என்பது தெளிவாகிறது" என்றார்.
எரிமலை வெடிப்புக்கு முன்னதாக அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் வெளியேற்றினர். இதன்படி குறித்த பகுதியில் இருந்து நான்காயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.