அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே புதிய வர்த்தக வரி ஒப்பந்தம்

இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான வரிகளை விதித்தார்.
ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக வரி தொடர்பாக புதிய ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டு இருக்கிறார். அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீதம் அடிப்படை வரி விதிக்கப்படுகிறது.
அதே சமயம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆட்டோ மொபைல், ஆட்டோ உதிரி பாகங்கள், விண்வெளி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் உள்நாட்டில் கிடைக்காத இயற்கை வளங்களுக்கு துறைசார் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபர் டிரம்ப் கூறும் போது இது அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவின் புதிய உச்சம் என்று கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



