மொஸ்கோவிற்கு அருகே ஆளில்ல விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மொஸ்கோவிற்கு அருகே ஆளில்ல விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்!

மொஸ்கோவிற்கு அருகே ஒரு ஆளில்ல விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து  Vnukovo மற்றும் Domodedovo, விமான நிலையங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாஸ்கோவின் தென்மேற்கில் உள்ள கலுகா நகரின் விமான நிலையத்தின் நிர்வாகத்தை மேற்கோள் காட்டி RIA செய்தி நிறுவனம், விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குவதை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை ரஷ்யா வெளியிடவில்லை. ஆனால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைனை காரணம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!