நிதி குற்றம் : வாடிகன் கர்தினாலுக்கு சிறை தண்டணை!
#SriLanka
#world_news
#Tamilnews
#sri lanka tamil news
#Italy
Dhushanthini K
1 year ago

நிதிக் குற்றங்களுக்காக வாடிகன் கர்தினால் ஒருவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏஞ்சலோ பெச்சு என்ற 75 வயதான இத்தாலிய கார்டினல் ஒருவருக்கே மேற்படி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய கர்தினால் போப்பின் முன்னாள் ஆலோசகரும் ஆவார்.
லண்டனில் சொத்து வாங்கியதன் மூலம் வத்திக்கான் கத்தோலிக்க திருச்சபைக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் அவர் தனது சொந்த ஊரான சர்தீனியா மறைமாவட்டத்திற்கு பெரும் தொகையை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர் எதிர்கால போப் பதவிக்கு சாத்தியமான வேட்பாளராக கருதப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வத்திக்கான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.



