பாதாள உலக செயற்பாடுகளில் 43 பொலிஸ் களங்கள் ஈடுபடுவதாக அறிவிப்பு!
43 பொலிஸ் களங்கள் மாத்திரமே பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த வருட தரவு பகுப்பாய்வு மூலம் அது தெரியவரும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கள் பாதுகாப்பு செயலமர்வில் கலந்து கொண்ட போது பதில் பொலிஸ் மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "பாதாள உலகத்தை ஒழிக்க வேண்டுமானால் மேற்கு, தென் மாகாணங்கள் என இரு மாகாணங்களையும் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கையில் பாதாள உலகக் கதை இல்லை. 43 பொலிஸ் களங்களில்தான் பாதாள உலகச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
பாதாள உலகத்தை ஒழிப்பேன். சில மாதங்களில் 1091 பேர் பாதாள உலகில் ஈடுபட்டுள்ளனர். வெளியே வரமுடியாமல் காலையில் ஆட்களை கொன்றுவிட்டு மதியம் துபாய் செல்கின்றனர். அவர்களை இந்த நாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.