லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழே கிரிந்தி ஓயாவின் இருபுறமும் உள்ள தாழ்நில மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு திஸ்ஸமஹாராம பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.