கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை: நாளைமுதல் வரும் புதிய நடைமுறை! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
கிளிநொச்சியில் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப் பொருள் பாவனையாளர்கள் தொடர்பான தகவல்களை அறியும் பட்சத்தில் 2023.12.17 நாளை முதல் உடனடியாக 718598838 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல செனவிரத்ன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (16) புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்துவைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் விசேட போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து போதைப் பொருள் வியாபாரிகளது தகவலை பெறுவதற்கான புதிய பொறிமுறையாக இந்த தகவல் வழங்குபவரின் தொலைபேசி இலக்கம் பொலிசாருக்கு காட்டாத புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த புதிய பொறிமுறைக்கமைய மாவட்டத்தில் போதைப் பொருளை ஒழிப்பது தொடர்பாக மாவட்டதிலுள்ள 09 பொலிஸ் நிலைய பிரதேசங்களில் இந்த புதிய தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்டுத்தப்படும்.

எனவே பொதுமக்கள் பயமின்றி போதைப் பொருள் வியாபாரிகள் தொடர்பான தகவல்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இலக்கத்தின் ஊடாக அறியப்படுத்தி இந்த மாவட்டத்தில் மட்டுமல்லாது இந்த நாட்டிலுள்ள எதிர்கால சந்ததிகளை இந்த போதை பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்காக போதைப் பொருள் வியாபாரிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிம் கோரிக்கை விடுத்துள்ளார்.