அமெரிக்க குடியேற்ற செயல்முறை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார் மெலனியா ட்ரம்ப்!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அமெரிக்க குடியேற்ற செயல்முறை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார் மெலனியா ட்ரம்ப்!

அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப், நாட்டிற்கு புலம் பெயர்ந்த போது ஏற்படும் கஷ்டங்களை எதிர்கொள்வது குறித்து உரை நிகழ்த்தியதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மெலனியா டிரம்ப்- டொனால்ட் டிரம்பின் மனைவி ஸ்லோவேனியாவில் பிறந்த அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.

தேசிய ஆவணக் காப்பகங்கள் இயற்கைமயமாக்கல் விழாவில் அவர் ஆற்றிய உரையின் போது, அமெரிக்க குடியேற்ற செயல்முறை குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

புதிய அமெரிக்க குடிமக்களாக பதவியேற்ற 25 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றிய மெலானியா டிரம்ப், குடியுரிமை பெற "நீங்கள் எடுத்த ஒவ்வொரு அடிக்கும், ஒவ்வொரு தடைகளுக்கும், நீங்கள் செய்த ஒவ்வொரு தியாகத்திற்கும்" வாழ்த்து தெரிவித்தார்.

2024 தேர்தலில் மீண்டும் பதவிக்கு வந்தால், அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்குவேன் என்று டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

இதனால் மெலனியா டிரம்பின் பேச்சுக்கு சமூக வலைதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!