ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க தீர்மானம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (16.12) கூடியது. குறித்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பசில் ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, இல்லை. அவர் நிறுவனராக கட்சி அமைப்புப் பணிகளையும் செய்கிறார். அரசியல் குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே தேசிய அமைப்பாளர் பதவியை காலியாக வைக்க அவரும் கட்சியும் உடன்பட்டனர். அரசியல் முடிவுகளின் அடிப்படையில் ஒரு நபரை நியமிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.