நாடாளுமன்றில் ஆவேச பேச்சு - மாரடைப்பால் மயங்கி சரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

#Parliament #world_news #Turkey
PriyaRam
1 year ago
நாடாளுமன்றில் ஆவேச பேச்சு - மாரடைப்பால் மயங்கி சரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

துருக்கி நாடாளுமன்றில், ஆளுங்கட்சியின் இஸ்ரேல் ஆதரவு போக்கை கண்டித்து ஆவேசமாக பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மெஸ், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.

மேற்காசிய நாடான துருக்கியில், ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களது அண்டை நாடான, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையிலும், இஸ்ரேலுடன் துருக்கி வர்த்தக உறவை பின்பற்றி வருகிறது.

இது தொடர்பாக எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன், துருக்கி நாடாளுமன்றில் நடந்த பாதீட்டு விவாதத்தில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மெஸ் பங்கேற்று ஆவேசமாக பேசினார்.

images/content-image/2023/12/1702718773.jpg

அப்போது, 'இஸ்ரேலுக்கு கப்பல்களை அனுமதிக்கிறீர்கள்; அதனை வர்த்தகம் என வெட்கம் இல்லாமல் கூறுகிறீர்கள்.

நீங்களும் இஸ்ரேலின் கூட்டாளி தான். காசா மீது இஸ்ரேல் வீசும் ஒவ்வொரு வெடிகுண்டுக்கும் உங்கள் பங்கு உண்டு' என பேசிவிட்டு, இறங்குகையில் மயக்கம் அடைந்து சரிந்தார்.

அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்ததில், இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் இரு இடங்கள் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன் தினம் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!