இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

#SriLanka #Sri Lankan Army
PriyaRam
2 years ago
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதவியை பொறுப்பேற்கும் முன், மேற்கு பாதுகாப்பு படைத் கட்டளைத் தளபதியாக அவர் தனது கடமைகளை ஆற்றியிருந்தார்.

images/content-image/2023/12/1702707552.jpg

இவர், பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியை பெற்று 1988 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்டார்.

அவரது இராணுவ சேவையின் போது படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 2021 ஆம் ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!