புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்தி நிற்கும் இலங்கை அரசாங்கம்: கஜேந்திரகுமார் சாடல்

#SriLanka #Sri Lanka President #Gajendrakumar Ponnambalam #Diaspora
Mayoorikka
2 years ago
புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்தி நிற்கும் இலங்கை அரசாங்கம்: கஜேந்திரகுமார் சாடல்

தமிழரரசியலில் தமிழ் தேசிய நீக்கம் நடைபெறுகிறது அதனையே உலகின் வல்லரசுகளும் விரும்புகிறது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார்.

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சமகால அரடியல் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மாலை திருகோணமலை மல்லிகா விடுதியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

 இதன்போது கருத்துவெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வங்குரோத்து நிலமையை மாற்றியமைக்க இந்த நாடு புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்துகின்றது. 

 தமிழரரசியலில் தமிழ் தேசிய நீக்கம் நடைபெறுகிறது அதனையே உலகின் வல்லரசுகளும் விரும்புகிறது. உலக தமிழர் பேரவையின் ஹிமாலய பிரகடணத்தில் ஆறு சரத்துக்கள் அடங்கியுள்ளது. அதன் வார்த்தைகளை கவனமாக அவதானிக்க வேண்டும், "இன்றைய நிலமைகளை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும்" என அதன் முதலாவது வசனத்தில் குறிடப்பட்டுள்ளது.

 இருப்பினும் தற்போது காணப்படும் நிலமைகளே நாட்டில் மாற்றியமைக்க வேண்டும் மாறாக தற்போதைய நிலைமைகள் நல்லவையாக காணப்படுவதாக அதில் கருதப்படுகிறது அது தவறான ஒன்று என குறிப்பிட்டார்.

 அடுத்தபடியாக பொருளாதாரத்தினை கட்டியெளுப்பவேண்டும் என்பதே. அதற்கமையநாடு சந்தித்துள்ள வங்குரோத்து நிலமையை மாற்றியமைக்க இந்த நாடு புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்துகிறது.

 அன்று விரோதியாக பார்க்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களிடம் இன்று உதவி கோரும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். இலங்கை அரசானது நாட்டிலுள்ள சொத்துக்களை விற்று நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

 புதுப்பிக்கத்தக்க சக்தி எனும் போர்வையில் வட கிழக்கு பகுதிகள் இன்று வல்லரசுகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது. இலங்கையின் மீன்பிடி எல்லைகளுக்குள் பிரவேசிக்கவும் மீன்பிடியில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது இவையும் வடகிழக்கிலேயே நிகழ்த்தப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

 இன்று தமிழ் தேசியம் மக்கள் மயப்படுத்தப்படுகிறது எதிர்வரும் 2025ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழ்மக்கள் விரும்பி ஒற்றை ஆட்சியை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 இதனை நடைமுறைப்படுத்தவே இந்த உலகத்தமிழர் பேரவை முனைவதோடு தமிழ் அரசியல் தலைமைகளும் பின்னின்று அதனை அவசரமாக நடைமுறைப்படுத்த எத்தணிக்கிறது என குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!