பொருளாதார வளர்ச்சியை நோக்கி இலங்கை!
#SriLanka
#Economic
PriyaRam
2 years ago
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவு வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.6 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,946 பில்லியன் ரூபா எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் விவசாயத் துறை 3 சதவீதமாகவும், கைத்தொழில் உற்பத்தித் துறை 0.3 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.