பூநகரியில் சுண்ணக்கல் அகழ்ந்த ரோக்கியோ நிறுவனம்! எதிர்ப்பு நடவடிக்கையில் மக்கள்
சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்ட ரோக்கியோ நிறுவனத்திற்கு எதிராக. அதனை நிறுத்தக் கோரி பூனகரி பிரதேசத்தின் வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தின் மூலம் அங்கு சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ரோக்கியோ நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று வாகனங்கள் வெளியேற்றப்பட்டது.

குறித்த பிரதேசத்திற்க்கு வருகைதந்த கனியவளங்கள் மற்றும் புவி சரிதவியல் திணைக்கள் அதிகாரிகள், வனத்திணைக்களம், பூனகரி பிரதேச செயலகம், பூனகரி பிரதேச சபை அதிகாரிகள் குறித்த பகுதி ஆயவுக்கு உட்படுத்தவேண்டியுள்ளதால் குறித்த அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிள்ளது.



எனினும் குறித்த சுண்ணக்கல் அகழ்வை நிறுத்தக் கோரி குறித்த பிரதேச மக்கள் பல நாள்களாக போராடி வருகின்றமை குறிப்பிட தக்கது.