இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் பொலிஸார் - கஜேந்திரகுமார் அதிருப்தி!
#SriLanka
#Batticaloa
#Police
#Gajendrakumar Ponnambalam
PriyaRam
2 years ago
இனவாதத்தை தூண்டிவிட்டு தமிழர்களின் உரிமையினை மறுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதை நேற்றைய சம்பவம் நிரூபித்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மயிலத்தமடுவிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட பலர் சென்ற நிலையில் பொலிஸாரினால் உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதன்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் தலைமையிலான குழுவினர் விளைவித்த குழப்பத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி செயலாளரின் அறிவுறுத்தலையும் மீறிய வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்பட்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.