முட்டை இறக்குமதி குறித்து வர்த்தக அமைச்சர் வெளியிட்ட தகவல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி எதிர்காலத்தில் ஒரு முட்டை வாடிக்கையாளருக்கு 35 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சந்தையில் முட்டையின் விலை அசாதாரணமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்தும் முட்டை விலையை காலவரையரையின்றி உயர்த்தினால், அரசாங்கத்தின் பதிலில் மாற்றம் ஏற்படாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.