பாகிஸ்தானின் காவல்துறை தலைமையகம் மீது பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி

#Death #Police #world_news #Attack #Pakistan #GunShoot #Office #Terrorists
Prasu
1 year ago
பாகிஸ்தானின் காவல்துறை தலைமையகம் மீது பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரையும் ராணுவ கட்டமைப்புகளையும் குறிவைத்து பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சி குழுவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் டேங்க் மாவட்டத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸ்காரர்கள் பலியாகினர். 

பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும், எனினும் பெரிய அளவிலான தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு அன்சருல் ஜிகாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!