வெனிசுலாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட தீயில் சிக்கி 16 பேர் பலி

#Death #Accident #world_news #Road #fire #Rescue #Venezuela
Prasu
1 year ago
வெனிசுலாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட தீயில் சிக்கி 16 பேர் பலி

வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. 

சுமார் 17 வாகனங்கள் மீது மோதியதில் அந்த வாகனங்கள் சேதமடைந்ததுடன் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு சம்பவ இடம் சென்று தீயை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. விபத்து தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!