தன்னை அடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தை பற்றி தெரிவித்த போப் பிரான்சிஸ்
#world_news
#Lanka4
#Pop Francis
#Tamilnews
#Burial
Prasu
1 year ago

போப் பிரான்சிஸ் அவருடைய கல்லறையை தேர்வு செய்திருக்கிறார். ஆனால் அது, இதற்கு முன் போப் பதவி வகித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா அல்ல.
87 வயதுடைய பிரான்சிஸ், ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் என்னுடைய உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன் என்று வெளியான அவருடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இதனால், நூறாண்டுகளுக்கு பின் வாடிகன் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் ஆகிறார்.
கடந்த 1903-ம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் தவிர்த்து வேறிடத்தில் அடக்கம் செய்யப்பட்டவர் போப் லியோ 8 ஆவார்.
அவருடைய உடல் ரோமில் உள்ள செயின்ட் ஜான் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது



