டேரா ராணுவ தளத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு

#Death #Attack #Lanka4 #BombBlast #Tamilnews #Building #Military
Prasu
1 year ago
டேரா ராணுவ தளத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு

2021ல் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறியதும், அந்நாட்டின் அதிகாரம் பயங்கரவாத அமைப்பினரான தலிபான் வசம் வீழ்ந்தது. இதை தொடர்ந்து, அந்நாட்டின் பல பயங்கரவாத அமைப்புகள், ஆப்கானிஸ்தான் நாட்டையொட்டி உள்ள பாகிஸ்தான் எல்லை பிராந்தியங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (TTP) எனும் தலிபானின் உள்ளூர் அமைப்பு பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், இன்று கைபர்-பக்துன்க்வா பிராந்தியத்தில், டேரா இஸ்மாயில் கான் நகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டராபான் (Daraban) டவுனில் ராணுவ தளத்தில் உள்ள காவல்நிலைய கேட்டின் மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றிய ஒரு வாகனத்தை செலுத்தி வந்து வெடிக்க செய்து, பெரும் சேதத்தினை விளைவித்தனர். 

இத்தாக்குதலின் போது பல ராணுவ வீரர்கள் உறங்கி கொண்டிருந்தனர் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின்படி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தபட்சம் 23 வரை உள்ளதாக தெரிகிறது. மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் டேரா இஸ்மாயில் கான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணுவ தளத்தில் 3 அறைகள் பலத்த சேதமடைந்துள்ளதால், இடிபாடுகளை நீக்கும் போது உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!