உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு!
#SriLanka
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள தேர்தலில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களிலும், வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்டுள்ள சபோர்ஜியா, கெர்சான், லுகான்ஸ்க், டொனஸ்க் ஆகிய பகுதிகளிலும் தேர்தல் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளின் முழு அளவிலான நிலப்பரப்பையும் ரஷ்யா கைப்பற்றவில்லை என்றாலும், ரஷ்யா தனது ஆட்சியை நடத்தி வருகிறது.
இந்நிலையிலேயே குறித்த பகுதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



