யாழ்ப்பாணத்திற்கு மிக அண்மையில் ஏற்படவுள்ள தாழமுக்கம்: வெளியான அறிவிப்பு

#SriLanka #Jaffna #NorthernProvince #weather #Rain
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்திற்கு மிக அண்மையில் ஏற்படவுள்ள தாழமுக்கம்: வெளியான அறிவிப்பு

யாழ் குடா நாட்டிற்கு மிக அண்மையாக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 18.12.2023 க்கும் 20.12.2023 க்கும் இடைப்பட்ட காலத்தில் வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மையாக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. 

 இது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மிக அண்மையாக தோன்றும் வாய்ப்புள்ளதனை மாதிரிகள் காட்டுகின்றன.

 எனினும் இதன் உறுதித்தன்மையை எதிர்வரும் 15.12.2023 அன்றே தீர்மானிக்க முடியும். அவ்வாறு ஒரு தாழமுக்கம் உருவாகினால் வடக்கு மாகாணம் முழுவதும் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. 

(மிகக் கனமழை கிடைத்தால் யாழ். நகரம் உட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டு) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 14.12.2023 வரை தொடரும் எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!