வவுனியா பிரதேச செயலகம் தொடர்பில் கலைஞர்களின் குற்றச்சாட்டு!

#SriLanka #Vavuniya
PriyaRam
2 years ago
வவுனியா பிரதேச செயலகம் தொடர்பில் கலைஞர்களின் குற்றச்சாட்டு!

வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் 2023ஆம் ஆண்டுக்கான ‘கலாநேத்திரா விருதின்‘ தெரிவுகள் துறைசார்ந்த நிபுணர்கள் இன்றி இடம்பெற்றுள்ளதாக கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த விருதானது நாடக எழுத்துரு, கீழைத்தேச இசை, மேலைத்தேய இசை, பரதம், குறும்படம், ஊடகம், மரபு இசை உட்பட 18 துறைகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், ஐந்து பேர் கொண்ட துறை சார்ந்த நிபுணர்களினால் வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் எனவும், வவுனியா பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

images/content-image/2023/12/1702280958.jpg

எனினும் வெற்றியாளர்கள் அவ்வாறு தெரிவுசெய்யப்படவில்லை எனவும், இதனால் பல திறமையான கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!