தென்னிலங்கையில் மீண்டும் குறிவைக்கப்படும் தமிழர் - ரணிலின் பொலிஸ் இராஜ்ஜியமா இது? மனோ காட்டம்!

#SriLanka #Colombo #Parliament #Tamil People #Ranil wickremesinghe
PriyaRam
2 years ago
தென்னிலங்கையில் மீண்டும் குறிவைக்கப்படும் தமிழர் - ரணிலின் பொலிஸ் இராஜ்ஜியமா இது? மனோ காட்டம்!

கொழும்பில் வசிக்கும் தமிழர்களின் விபரங்களை கோரி வழங்கப்படும் விண்ணப்பங்கள் தமிழில் வழங்கப்படுவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று காலை நாடாளுமன்றத்தில் சாடியுள்ளார். 

மேலும் ரணில் பொலிஸ் இராஜ்ஜியமா நடக்கிறதெனவும் கேள்வியெழுப்பினார். “பொலிஸார் வழங்கும் விண்ணப்பப் படிவத்தில் பெயர் விபரங்களுடன் சமயம் என்னவென்றும் கேட்கப்படுகிறது.

அப்படியென்றால் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கவா இதனை கேட்கிறீர்கள்? தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த செயற்பாடு நடக்கிறது.

images/content-image/2023/12/1702276615.jpg

ரணிலின் பொலிஸ் இராஜ்ஜிச்சியமா?அமைச்சர் டிரானின் பொலிஸ் இராச்சியமா?அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா? இப்போது நடக்கிறதென நான் கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.

முன்னர் யுத்தம் இருப்பதால் இப்படிச் செய்தீர்கள் என்று கூறப்பட்டது. இப்போது யுத்தம் உள்ளதா? தனிப்பட்ட விபரங்களை கேட்பது எதற்காக? தமிழர்களை இலக்குவைத்து இப்படிச் செய்யவேண்டாம்.

எனது மக்கள் என்னிடம் கேள்வியெழுப்புகின்றனர். வெள்ளை வான் காலத்தில் கூட உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது செயற்பட்ட நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம்” எனவும் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!