கதிர்காமம் பிரதான விகாரையின் கபுவா தலைமறைவு!
நீதிமன்றினால் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள கதிர்காமம் பிரதான விகாரையின் பிரதான கபுவா மற்றும் ஆலய திறைசேரியின் பொறுப்பதிகாரி கபுவா ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் நேர்த்திக்கடனுக்கான பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி ருஹுனு கதிர்காமம் மஹா தேவாலயத்திற்கு வழங்கிய 38 பவுண்கள் எடை கொண்ட தங்க வட்டு காணாமல் போனமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தென் மாகாணத்தை விட்டு வெளியேறி வேறு மாகாணத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் ஆதரவுடன் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயாராகி வருவதாகவும் கோவிலில் உள்ள மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் கதிர்காமம் விகாரைக்கு விஜயம் செய்த போது, கபுகா பங்கேற்கவில்லை.