இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் கையில்! இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்டபோது இந்தியா வேறு ஒரு நெருக்கடி விடயத்தில் நடந்துகொள்ளவில்லை எந்த நாட்டிற்கும் உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் தனது பங்களிப்பை வழங்கியது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் தலைமைத்துவம் வலுவான இந்திய இலங்கை உறவுகள் குறித்து தெளிவாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சீனா கப்பல்கள் கொழும்பிற்கு வருவது குறித்த இந்தியாவின் கரிசனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இந்தியாவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தில் உள்ளன கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வது இரு நாடுகளினதும்கூட்டு பொறுப்பு கடப்பாடு எனவும் தெரிவித்துள்ளார். உருவாகின்ற கடல்சார் சவால்களிற்கு இணைந்து தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் என குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர் பாதுகாப்பும் ஸ்திரதன்மையும் காணப்பட்டால் அமைதியும் வளமும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் எங்கள் நாடுகள் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கூட்டு பொறுப்பாகும் இந்த அர்த்தத்தில் இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது பரஸ்பரம் ஒன்றிணைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.