நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம்!
#SriLanka
#Parliament
PriyaRam
2 years ago
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
புதிய திருத்தங்களின்படி, டீசல், பெட்ரோல், எரிவாயு மற்றும் சோலருக்கும் வட் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் விவசாய உழவு இயந்திரங்கள் மற்றும் இரசாயன உரங்களுக்கும் வட் வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.