விசர் நாய் தண்ணியைக் கண்டது போல் தேர்தலைக் கண்டு அஞ்சும் ரணில் - சிறீதரன் விமர்சனம்!

#SriLanka #Election #Ranil wickremesinghe #sritharan
PriyaRam
2 years ago
விசர் நாய் தண்ணியைக் கண்டது போல் தேர்தலைக் கண்டு அஞ்சும் ரணில் - சிறீதரன் விமர்சனம்!

தேர்தல் தொடர்பான விடயங்களில் தனது இருப்பைப் பாதுகாக்கவே ஜனாதிபதி விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதிக்கு தேர்தல் வருத்தம் இருக்கின்றது. ஆனால் தேர்தல் நடக்காது. தேர்தல் நடக்கும் என்று சொல்வது ஜனாதிபதிக்கு ஒரு வருத்தமாக இருக்கிறது.

அவர் இவ்வாறு கூறி தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள பார்க்கின்றார். ஆனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அரசியலமைப்பின் பிரகாரம் அவர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.

images/content-image/2023/12/1702269944.jpg

அதை நடத்தினால் தான் அவர் ஏனைய தேர்தல்களைப் பற்றி சிந்திக்க முடியும். ஆனால் அவர் தேர்தலை நடத்த பயப்படும் நிலைமை காணப்படுகிறது. 

தேர்தல் என்றாலே விசர் நாய் தண்ணீரை கண்டது போல் பயப்படுகின்றார். ஆகவே அவர் தேர்தலை நடத்தவே மாட்டார். 

எதிர்வரும் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேர்தல் ஒன்றினை நடத்தியாக வேண்டும். அதன்பின் யார் ஜனாதிபதியாக வருகின்றார்களோ அவர் தேர்தலை பற்றி யோசிப்பார். 

ஆகவே இலங்கையில் தற்போதைக்கு வேறு தேர்தல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. 

ஏதேனும் அதிசயங்கள் அல்லது அழுத்தங்கள் இடம்பெற்றால் மாத்திரமே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!