நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்!

#SriLanka #strike #government
Mayoorikka
2 years ago
நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்!

தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை நாடாளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 27,000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/1702267859.jpg

 தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

 எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது இந்த வேலை நிறுத்தத்தின் மற்றுமொரு நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!