அரசாங்கத்தை ஏமாற்றும் கோடீஸ்வரர்கள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர்கள் வரி செலுத்தத் தவறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வருடத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கு மேல் இறக்குமதி செய்த 712 வணிகர்களில், 15 வீதமானோர் வருமான வரி செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, அந்த குழுவின் தலைவர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான 3202 புதிய வீடமைப்புத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவற்றில் எதுவுமே வரிப் பதிவேட்டில் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.