சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைக்குமாறு அறிவுறுத்தல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைக்குமாறு அறிவுறுத்தல்!

உட்கொள்ளும் எண்ணெயின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்க முடியும் என இலங்கை போசாக்கு வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.  

ஒரு தடவை பயன்படுத்திய எண்ணெயைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என அதன் தலைவர் நிபுணர் கலாநிதி திமதி விக்கிரமசேகர தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அதிகமாக எண்ணெய் பயன்படுத்தினால், எந்த வகையான எண்ணெயாக இருந்தாலும், அது நம் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 

இரண்டாவது விஷயம், எண்ணெயைப் பயன்படுத்தும் போது, ​​மீண்டும் மீண்டும் எண்ணெயைப் பயன்படுத்தும்போது ஏற்படும் ரசாயன கலவைகள். நமது இதயம் மற்றும் தமனிகள் மற்றும் நரம்புகளில் எண்ணெய் படிய நேரிடுகிறது. இது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!