வடக்கு இத்தாலியில் இரு ரயில்கள் மோதி பாரிய விபத்து!
#SriLanka
#Accident
#world_news
#Lanka4
#Train
#sri lanka tamil news
#Italy
Dhushanthini K
1 year ago

வடக்கு இத்தாலியில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விபத்து நேற்று (10.12) பிற்பகல்போலோக்னா மற்றும் ரிமினி இடையே, குறிப்பாக ஃபென்சா நகரத்திற்கும் ஃபோர்லியின் கம்யூனுக்கும் இடையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதுடன், யாரும் தீவிரமான நிலையில் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில்கள் மிகக் குறைந்த வேகத்தில் மோதியதால் பாரிய சேதம் தவிர்க்கப்பட்டதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.



