கோட்டாபய மைத்திரி ஆகியோரை கொலை செய்வதற்கான சதி - வழக்கிலிருந்து விடுதலையான நாலக!
#SriLanka
#Gotabaya Rajapaksa
#Court Order
#Maithripala Sirisena
PriyaRam
2 years ago
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைக் கொல்ல சதி செய்ததாக 2019 இல் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை குறித்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.