மூன்று தடவைகள் மின் கட்டண உயர்வு: விசாரணைக்கு அழைப்பு
இந்த வருடத்தில் மாத்திரம் மூன்று தடவைகள் மின்சாரக் கட்டண உயர்வினால் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கான துறைசார் கண்காணிப்புக் குழு, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வந்து இவ்விடயத்தை முன்வைக்குமாறு அறிவித்துள்ளது.
இதன்படி, ஆணைக்குழுவின் தலைவர் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை நாளை (7) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இவ்வருடம் 18 வீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதல் புதிய கட்டணங்கள் அமுல்படுத்தப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபையானது மின்சார கட்டணத்தை 35% மற்றும் 68% என அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததுடன் அதற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது.