இந்தோனேசிய எரிமலை வெடிப்பின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
#Death
#world_news
#Indonesia
PriyaRam
1 year ago

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற இடத்தில் எரிமலை வெடித்துள்ளது. இந்நிலையில் குறித்த மலைப்பகுதியில் 75 மலையேற்ற வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டடிருந்தாக தெரவிக்கப்பட்டது .
அதில் 43 பேர் எரிமலை வெடிப்பு காரணமாக மீண்டும் இறங்கியுள்ளனர். 11 பேர் சடலமாக மீடக்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் மீடக்கப்பட்ட நிலையில் 12 பேரை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர்.
தற்போது காணாமல் போயிருந்த 12 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக குறித்த எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது.



