சவேந்திர சில்வா உள்ளிட்ட இருவருக்கு உடனடித் தடை விதிக்க வலியுறுத்தும் பிரித்தானியா!
#SriLanka
#Shavendra Silva
#UnitedKingdom
PriyaRam
2 years ago
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு எதிராக உடன் தடை விதிக்கவேண்டும் என பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்தான விவாதம் நேற்று இடம்பெற்றது.
இதன்போது “அமெரிக்கா, கனடாவைப் பின்பற்றி இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா, ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு எதிராகப் பிரித்தானியா தடைகளை விதிக்க வேண்டும்” என லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் எட்டேவே தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் உடன் நீக்கப்படவேண்டும் என பிரித்தானியா வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.