நுவரெலியா செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#NuwaraEliya
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நிலவும் கடும் மழை காரணமாக மலையக வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் சாரதிகளை எச்சரித்துள்ளது.
மண் சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதற்கு வாய்ப்புள்ள நிலையில், மூடுபனி மற்றும் வழுக்கும் வீதிகளில் பயணிக்கும் போது சாரதிகள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நிமல் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
மூடுபனி சாலையின் தெளிவான பார்வையைத் தடுக்கிறது என்று அவர் கூறினார்.
வளைவுகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் கியர் மாற்றுவதில் குறிப்பாக கவனம் செலுத்துமாறு சாரதிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.