ICCயின் தடைகளுக்கு மத்தியில் ஆசிய கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டிக்காக துபாய் சென்றது இலங்கை அணி!
#SriLanka
#Srilanka Cricket
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி துபாயில் நடைபெறும் ஆசிய கிரிக்கெகட் சம்பியன்ஷிப் போட்டிக்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட இந்த குழு இன்று (06.12) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு கொழும்பு ரோயல் கல்லூரியின் சினெத் ஜெயவர்த்தன தலைமை தாங்குகிறார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கைக்கு தடை விதித்துள்ள பின்னணியில், இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.
போட்டிகள் எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி எதிர்வரும் 09ஆம் திகதி ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.