கல்முனையில் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்குமறியல் நீட்டிப்பு!
#SriLanka
#Kalmunai
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கல்முனையில் ஹோட்டல் ஒன்றில் பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு வரும் 19 ஆம் திகதிவரை விளக்குமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
கல்முனையில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.