பிரபாகரனின் மகள் துவாரகாவின் காணொளி குறித்து கருத்து தெரிவித்த ஜெனரல் கமல் குணரத்ன
#SriLanka
#Minister
#sri lanka tamil news
#Military
#leader
#Prabhakaran
#daughter
#Video
Prasu
2 years ago
கடந்த மாதம் மாவீரர் தினமன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வி பேசுவதாக வெளியான காணொளி தொடர்பில் கருத்துரைக்கும்போதே முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவதாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி வெளியான வீடியோ போலியானது.
இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் ஒரு அல்லது பல குழு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளது என்பது நூறு வீதம் உண்மை என்பதையும் குறிப்பிட்டார்.
2009 ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் தலைவர் பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர், அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்ய முடியாது எனவும் கூறினார்.