தாய்லாந்தில் பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி

#Death #Accident #world_news #Bus #Thailand #Rescue
Prasu
2 years ago
தாய்லாந்தில் பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பேருந்து ஒன்று 49 பேருடன் பிரச்சாவ் கிரி கான் மாகாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஹாட் வனாக்கார்ன் தேசிய பூங்கா அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் வேகமாக மோதியது.

இதில், பேருந்தில் இருந்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " பேருந்து ஓட்டுனர் தூங்கியதே விபத்துக்கான காரணம் என தெரிகிறது. விபத்தில் உயிர் பிழைத்த பேருந்து ஓட்டுனருக்கு ரத்த மாதிரி சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிகிறோம். உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் தாய்லாந்து, பர்மா மற்றும் வீராபெட் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!